அனுபவம், பயண கட்டுரை, பயணம்

பழனி பாத யாத்திரை…பயணம்… கொஞ்சம் காமெடி கூட…
சின்ன வயசுல எங்க அப்பாத்தா, ஐயா,அப்பா கூட போயிஇருந்தேன்… நல்ல சந்தோஷமான பயண அனுபவம்… டிசம்பர் குளுருல போயிட்டு வந்த நினைவுகள் அப்படியே இருக்கு அப்ப எனக்கு 16 வயசு இருக்கும் காலை மாலை குளிக்கணும் அது ஒரு பெரிய பிரச்சனை… மாலை கூட பரவாயில்லை காலை தான் தொல்லை 5 மணிக்கு எங்க அப்பா எழுப்பி விடுவாரு ஆமாம் அவரும் மலைக்கு மாலை போடிருந்தாரு…  48 நாளு மிக கடுமையான விரதம் நான் இல்லை எங்க அப்பா.. நான் என்ன.. என்ன.. கோல்மால் செய்தேன்னு எனக்கு தான் தெரியம்… எங்க அம்மாவுக்கு நான்னா கொஞ்சம் பாசம் அதிகம்… அது போதாதா மூத்த பையன் வேற… என் அப்பா மட்டும் விரதம் இருக்க நான் யாருக்கும் தெரியாமல் ஹோட்டலில் போய் விரதத்தை முடித்துவிடுவேன்… முருகன் தப்பா எடுத்துக்கமாட்டார் சின்ன பையன் தானே….

அப்பறம் ஒரு பெரிய தொல்லை பொண்ணுங்க… எப்படிங்க அந்த வயசுல பாக்க கூடாதுன்னா.. முடியல… முருகனே ரொம்ப பீல் பண்ணிருப்பார் என்னோட சாரிய கேட்டு கேட்டு… அந்த கதைய விடுங்க… பழனிக்கு அப்ப போனது உண்மையாவே நல்ல அனுபவம்… ரோட்ல தூங்கி…ரோட்லயே சாப்பிட்டு..ரோட்டோராமா இருகிற குட்டைல குளிச்சு.. சில சமயம் பம்ப்பு செட்ல குளிச்சு… குன்றகுடில இருந்து பழனி வரைக்கும் அப்ப இருந்த சுமார் ரக ரோடுகள்…இருபக்கமும் பச்சை பச்சை என வயல் வெளியா சில சமயம் மட்டாந்தரையா சில சமயம்… காய்ந்து போன கிழக்கு தொடர்ச்சி மலையின் எச்சங்கள்… சும்மா சொல்ல கூடாது….அருமையான நினைவுங்க எழுதும் போதே சுகமா இருக்கு…

புதிதா ஆரம்பிச்ச பதிவா… நிறைய விஷயம் இருக்கு….இந்த இங்கிலீஷ்ல இருந்து தமிழா மாத்துவததுக்குள்ள தாவு தீந்திருது (“மாத்துவததுக்குள்ள” இத அடிக்க இது வருது “மத்ரதுகுள்ள” முடியல… இப்பவே கண்ண கட்டுது… நிறைய இருக்குங்க… எங்கயும் போய்டாதீங்க…வெகு விரைவில் உங்கள் அபிமான RSS Feed ல பார்ப்போம்…தொடருங்க… )
      

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!
 • நல்லா எழுதுறீங்க.
  இன்னும் நிறைய எழுதுங்க.

 • வருகைக்கும் பகிவுக்கும் நன்றி…அம்பிகா

 • Dr.P.Kandaswamy

  நண்பருங்க வந்துட்டேன்.

  ராசராச்சோழன், பேரைப்பாத்தவுடனே சத்தியராஜ் ஒரு படத்துல இப்படித்தான் பேரு வச்சுருப்பாருங்க, அதான் ஞாபகம் வருதுங்க.

  நல்லாப்பண்ணுங்க.

  பிரபல பதிவராவதற்கு நல்ல நல்ல யோசனையெல்லாம் என்னோட பழய பதிவுகள்லெ இருக்குதுங்க. பாத்துப்பொளச்சிக்குங்க.

 • நீங்கள் எழுதியபடி வலையத்தில் உலா வருபவர்கள் இருகிறார்கள்… நான் உண்மையாக நல்ல வழியை சொல்லி இருப்பீர்கள் என்று வந்து பார்த்தேன்… ஏமாந்தேன்…

  என் தளத்தின் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி…

  என்னுடைய சொந்த பெயாரை விட இந்த பெயரில் உள்ள கம்பீரம்…பிடித்திருந்தது…