கவிதை

மனஇறுக்கம்…

அது தொலைத்த
நிமிடங்கள்….
கொஞ்சம் நஞ்சம் அல்ல…
கிரகண சந்திரன் போல்…
மனதில் அது நிரப்பிய
கலக்க இருள்
கொஞ்சம் நஞ்சம் அல்ல…
மனதினை இறுக்கி…
உணர்வுகளை காயப்படுத்தி…
சே,வாள்ளஸ்
நம்மவர்கள் ராசராசன், பூலித்தேவன்
அனைவரையும் இது
இப்படிதான்
செய்திருக்குமோ….

நெருங்காதே நகர்ந்து செல்…
ரணங்களை தாங்கி..
நொடிகளில் சுவசிப்பவர்கள்…
இல்லாத துயரங்களில்
மனதை தைக்க…
இருக்கும் நிமிடங்களை
இழக்க தயாரில்லை..
   

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!
 • //கிரகண சந்திரன் போல்…
  மனதில் அது நிரப்பிய கலக்க இருள் கொஞ்சம் நஞ்சம் அல்ல…//

  என்னத்த நான் சொல்ல…அருமை. வாழ்த்துக்கள்

 • கவிதை மிக அருமை.

  கவிதயை சற்று உடைத்துப்போட்டால ஓசை வருகிறது செய்துபாருங்களேன்.

  இது என் கருத்து. தவறென்றால் பொருந்திக்கொள்ளவும்

  உதாரணத்துக்கு.

  கிரகண சந்திரன் போல்…
  மனதில் அது நிரப்பிய
  கலக்க இருள்
  கொஞ்சம் நஞ்சம் அல்ல.

 • நன்றி @ மதுரை சரவணன்

  நன்றி @அன்புடன் மலிக்கா – நீங்கள் சொல்வது சரிதான்…நிச்சயம் செய்கிறேன்…