கவிதை

நிறப்பிரிகை…

நிறப்பிரிகை படித்திருப்பாய்…
இயற்பியலில்
உன் நிழல் பட்டு
நிற சிதறல்களாய்
ஒளிரும்
என்னை பார்…
எளிதில் உனக்கு
விளங்கும்

காதல் காயப்படுத்துமாம்
எப்படி
அது உண்மையாகும்…
என் காயங்கள்
உன்னால்
ஆற்றப்படும் போது…

குளிர்ந்த காலை…
இதமான பனி காற்று
ஆனால்
மூச்சு முட்டியது
உன் நினைவுகளால்…

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!
 • நல்லா இருக்குங்க.

  /காதல் காயப்படுத்துமாம்
  எப்படி
  அது உண்மையாகும்…
  என் காயங்கள்
  உன்னால்
  ஆற்றப்படும் போது… /

  Nice

 • நல்லாருக்குங்க கவிதை… சேர்த்துவைத்த நிறப்பிரிகைபோல…

 • வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி – வானம்பாடிகள்,க.பாலாசி