அரசியல், கவிதை

நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை…நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை…

ஒரு
உணர்வற்ற தலைவன்
குடும்பத்தோடு
ஆட்சி கட்டிலில்
கும்மாளம் அடிப்பதை
காண்பதற்கு….

நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை…

தன்
இனம்
அழித்தவனை
ஆரத்தழுவும்
அருவருப்பை
காண்பதற்கு….

நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை…

அரசியல்
என்றால் 
கண்ணில்
ஆட்சி மட்டும்
பளபளக்கும்
தமிழ்
அரசியல்வாதி குமுட்டைகளை
காண்பதற்கு….

நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை…

ஐயோ
என் தமிழ் நாட்டில்
நான் இல்லை…
முத்துக்குமார் போன்று
சிறு பொறியாய்…

என்
இனமே
துரோகி கூட்டங்களால்
தூள் தூளாகி போனயே!

மரணத்தை
வென்ற மாவீரர்கள்
புகைபடங்களில்
துரோக கூட்டங்கள்
மனதை
அம்மணமாக்கி
அம்பலத்தில்….

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!