கவிதை

புதிய பதிவர்…


நித்தம்

ஒரு இடுகை
நித்திரை கெடும்
சில நாள்…

பலர் படிப்பார்
பலர் ரசிப்பார்…
வோட்டுக்களை
பார்த்தால் 
பலர்
சிரிப்பார்…

நல்லதொரு பயணம்…
அங்கங்கே
பொறுமை கொஞ்சம் 
சோதிக்கும்…
நிலைத்துவிட்டால்
தமிழ் எழுத்துன்னை
நேசிக்கும்..

தமிழ்
பெண்மை தன்மை 
வாய்ந்ததாம்
கர்டுவேல் மதிப்பிட்டார்…
இன்பத்தை மட்டும் 
ஊட்டும்…
வீரியத்தை அல்ல
என்றார்…
புறநானூறு 
படித்தாரோ என்ற 
ஐயம் எனக்கு…

நண்பர்களே… 
எனக்கு 
பொறுமை அதிகம்
உங்கள் 
வரவுக்கு 
என் வந்தனங்கள்…
சராசரி மனிதனாய்… 
இன.. மான…தமிழனாய்…

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!
 • //அங்கங்கே
  பொறுமை கொஞ்சம்
  சோதிக்கும்…
  நிலைத்துவிட்டால்
  தமிழ் எழுத்துன்னை
  நேசிக்கும்..//

  class…

 • சாராசரி மனிதனாய் வாழ்த்துக்கள்

 • அருமை

 • HVL

  வாழ்த்துகள்!

 • கே.ஆர்.பி.செந்தில்

  நல்ல கவிதை. இன்னும் மெருகேற்றினால் சிறந்த கவிதை..
  வாழ்த்துக்கள்

 • அருமை.:-)

 • Software Engineer

  சார் – நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
  http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

 • Software Engineer

  சார் – நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
  http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

 • இனிய வாழ்த்துக்கள்.

 • தளராமல் உங்கள் எழுத்துப் பயணம் நீண்ட நெடியதாக இருக்க வாழ்த்துகள்.

 • தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  ப்ரியமுடன்…வசந்த்
  மதுரை சரவணன்
  உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் – ulavu.com)
  HVL
  கே.ஆர்.பி.செந்தில்
  malgudi
  Software Engineer
  சி. கருணாகரசு
  ஜோதிஜி