கவிதை

12 C மயிலை பேருந்து…நீ
வருவாய் என
தெரியும்…
நின்றேன்
உன்
பார்வை
படும் படி…

அது
ஒரு மழைக்காலம்
கையில்
கவிதைகள்…
என்னோடு
மழையில்
அவைகளும் நனைந்தன…

12 C மயிலை
பேருந்து…
சன்னலோரம்
நீ…
படிக்கட்டு பயணம்…
ஆதரவு தந்தாய்
என்
கவிதைகளுக்கு …
உனக்கு
தெரியாது…
அது
அத்தனையும்
உனக்காக
எழுதியவை என்று…

ஒரு நாள்
அத்தனை
கவிதைகளும்
சாலையோரம்…
நீ
மட்டும்
அதே
பேருந்தில்…
உன்னால்
மறுக்கபட்டது….
எனது கவிதைகள் கூட…

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!
 • அடடா வட போச்சா?

 • காதல் சில கவிஞர்களையும்…. பல கவிதைகளையும்….
  கொஞ்சம் பைத்தியங்களையும் உற்பத்தி செய்யுக்கொண்டேதான் இருக்கும்.

 • அன்பின் ராசராசசோழன்

  கவிதை அருமை – கற்பனை அருமை

  மறுக்கப்பட்டது கவிதைகள் கூட ….. மறைந்திருக்கும் பொருள் ஆயிரம்

  நல்ல கற்ப்னையில் விளைந்த நற்கவிதை
  நல்வாழ்த்துகள் ரா ரா சோ
  நட்புடன் சீனா