கவிதை

யாருக்கும் மனமும் இல்லை… நேரமும் இல்லை…

ஒரு
மொட்டு
மலர்ந்தது..
என்
மன இடுக்குகளில்
உறைந்திருந்த
துன்ப சுமைகள்…
சிதறி ஓடின…

ஓங்கி
வளர்ந்த மரம்
எப்பொதும்
யாரிடமும்
எதுவும் கேட்டதில்லை…
இலைகளை
உதிர்த்து
இயன்றவரை
சொல்லி பார்க்கும்
ஆனால்
யாருக்கும் புரிவதில்லை
என்ன அவசரமோ…
கூடு இழந்த
குருவிகளின்
கண்ணீர் கதைகளை
அதன்
இலையுதிர் காலத்திலே…

“நீரோடை”
பார்த்ததும்
துள்ளி குதித்தேன்…
எத்தனை
கவிதைகளை
அள்ளி இருப்பேன்…
இங்கிருந்து…
இந்த தடாகத்திலிருந்து…  

எங்கிருந்தோ
வந்த
தென்றல் காற்று
வழி மறித்து…
காதினில்
ஏதோ
உரைத்தது…
அதன் மொழி
புரியவில்லை
தமிழ் இல்லையே…
அதனாலா…  
ஆனால்
மயக்கத்தில் ஆழ்த்தியது…

பூக்கள்,
மரங்கள்,
மலை முகடுகள்,
நீரோடைகள்,
இதமான தென்றல் காற்று,
கணக்கில் வரா
இன்னும்
எத்தனையோ
இயற்கை செல்வம்…
எங்கும் தெறிக்கின்றன…
இன்பமெனும்
நினைவு விதைகளை
பயிரிடத்தான்
இங்கு
யாருக்கும்
மனமும் இல்லை
நேரமும் இல்லை…

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!
 • கே.ஆர்.பி.செந்தில்

  ஈரம் நிரம்பிய காற்றில் தலையாட்டும் கிளைகளுக்கு
  கிளிகளின் பாடல் ..

 • ////நினைவு விதைகளை
  பயிரிடத்தான்
  இங்கு
  யாருக்கும்
  மனமும் இல்லை
  நேரமும் இல்லை…
  ////

  மனம் ஒரு குரங்கு அது எப்பொழுது வேண்டுமானாலும் எப்படியும் மாறும் ஆகவே நாம் மாற்ற முயற்சிப்போம் . நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி

 • இயற்கை செல்வம்…
  எங்கும் தெறிக்கின்றன…
  இன்பமெனும்
  நினைவு விதைகளை
  பயிரிடத்தான்
  இங்கு
  யாருக்கும்
  மனமும் இல்லை
  நேரமும் இல்லை…

  ……நல்லா சொல்லி இருக்கீங்க… 🙂

 • நினைவுகளை அடிக்கடி புடம்போடமறக்கும் மனிதர்களுக்கு நேரமுமில்லை மனமுமில்லை..

  //நீரோடை"
  பார்த்ததும்
  துள்ளி குதித்தேன்…
  எத்தனை
  கவிதைகளை
  அள்ளி இருப்பேன்…
  இங்கிருந்து…
  இந்த தடாகத்திலிருந்து… //

  இத்த்டாகதினால் பிறந்ததுதான் என் நீரோடையும்.

 • VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME 🙂 >>> http://artmusicblog.blogspot.com/

 • அழகிய கவிதை.

  நீரோடை"
  பார்த்ததும்
  துள்ளி குதித்தேன்…
  எத்தனை
  கவிதைகளை
  அள்ளி இருப்பேன்…
  இங்கிருந்து…
  இந்த தடாகத்திலிருந்து..