கவிதை

பணம்…

நீண்ட தூரம்
நடந்தேன்
மனதின்
வலி போகவில்லை…
ச்சீ…நீங்கள்
எல்லாம்
மனிதர்களா…
பணமென்னும்
நஞ்சை உண்ண
மனித முகத்தோடு
திரியும்
விலங்குகளே…
வழி நெடுக
வரலாறுகள்
ஆனாலும்
புரியவில்லை
காசிற்கு
கொடுக்கும்
அன்பை
கொஞ்சம்
மனிதருக்கும்
கொடுத்தால் என்ன…
காற்றில்
பணம் பறக்க
அருகில்
ஒரு
பணத்தாசை
பிணம் மட்டும்….
அது
அந்நாட்டு
பணமில்லை… 
சீந்தி பார்க்க
ஒருவர் இல்லை…
பிணம் சொன்ன
கதை இது தான்…
பணம்
மட்டும்
வாழ்கை இல்லை…
Avatar

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!