கவிதை

என்னை கைவிட மட்டாயே…

நீருக்குள் உலவுகின்ற
மீனை போல…
உன் நினைவுக்குள்
உலாவிக் கொண்டிருந்தேன்…
இறுக தழுவிய
நிமிடங்கள்…
பரிமாறிய முத்தங்கள்…
தலை கோதிய
தருணங்கள்..
இன்னும்
சில பிற…
என்
நினைவு நரம்புகளை
அறுத்தது
உன் வார்த்தைகள்
“என்னை கைவிட மட்டாயே “
சிரிப்பு தான்
வருகிறது…
ஒரு வருடம்
முடியபோகிறது…
நீ அவனை
மணம் புரிந்து…

Avatar

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!