கவிதை

அழகாய் மனிதர்கள் செதுக்கிய ஓவியம்…

வயலோர வரப்புகள்,
அது அழகாய்
மனிதர்கள்
செதுக்கிய ஓவியம்…
அதோ அந்த
மலை முகடு,
அதை ஒட்டிய
மாலை நேர சூரியன்…
சிறு சாரலாய்
சன்னல் நனைக்கும்
கோடை மழை…
யாருக்கும்
அடங்காத,
ஆதி அந்தம்
தெரியா இருப்புப்பாதை…
பனம் பழம்
விற்ற பாதையோர
சிறுவர்கள்…
இனி 
எப்போது வாய்க்கும்
இனிய
இந்த
மாலை நேர
பேருந்து பயணம்…
நினைவுக்குள்
நிழலாடும்
அடங்காத
ஆசை இது…
தூர தேச
தமிழர்களின்
விழி  ஏங்கும்
கனவு இது…

Avatar

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!