கவிதை

பூவாய் மலர்ந்தாய்…

poovaai-malaranthaai
நெகிழ்வோடு நகர்ந்த
தருணங்கள்
காந்த புலன்களாக
நுழைவரியா காதல்கள்!
வசந்தங்கள்
வீசிப் போகும்
மாலை நேரப் பொழுதுகள்!
தமிழ்ப்பசி
போக்கிய
கடல்புறா நாவல்கள்!
பூவாய் மலர்ந்த
தமிழ்ப்பிள்ளைகள்!
இதுவும்
ஒரு வெற்றி தான்…
நெடுவாசல்,கதிராமங்கலம், நீட்டை
தாண்டி!
தமிழா!
நீ பூவாய் மலர்ந்தாய்…

Avatar

About ராசாராச சோழன்

எங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்!!!