இது நயன்தாரவின் ஆதங்கம்.. உண்மையாக இதில் நியாயம் உள்ளது… அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த ஐயா படத்தில் எந்த வித உருவகுலைப்பும் இல்லாமல் அழகான தமிழச்சியாக வந்தார்… அனைவரும் ஏற்றுகொண்டோம் படமும் நல்ல வசூல்… ஆனால் இன்றைக்கு இருக்கும்  நயன்தாரவை வைத்து எந்த படமும் எடுக்க முடியாத அளவிற்கு பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி கொண்டு… எந்த இயக்குனர் பொறுத்துக்கொள்வார்.

அங்காடி தெரு அஞ்சலி… படத்தை பற்றி அவருக்கு எந்த கவலையும்  இல்லை ஏற்கும் பாத்திரமே.. சிறந்தது என்று மிக இயல்பாய் நடித்துள்ளார் ரெட்டைசுழியில்…

மற்றவர்களை பார்த்து கேள்வி எழுப்பும் முன் தான் என்ன செய்கின்றோம் என்று உணரவேண்டும்..  ஐயா படம் பார்த்து ஒரு நல்ல நடிகை தமிழுக்கு வந்துவிட்டார் என்று இருந்தேன்… ஆனால் இன்று அவர் நிலை என்ன…

அஞ்சலி மிக நன்றாக நடிக்கிறார் கதாபாத்திரத்தை உணர்ந்து…அவரும் நயன்தரா போல் ஆகிவிடக்கூடாதென்பதே என்னுடைய ஆசை….

மனதில்பட்டது….