நெடுகர்கள் – க. பேரபாயம் – I
க. பேரபாயம் – I
நீர்திவலைகள் கரைந்து சாளரங்களில் வழிந்து கொண்டிருந்தது. புல்வெளிகளில் பனி துளிகள் கீழே விழுவதா… இல்லை வேண்டாமா…என்று யோசித்து கொண்டிருந்தன. விசித்திர புன்னகை செய்து கொண்டே ஒரு நெடுகன் வெகு வேகமாய் புரவியில் வந்து கொண்டிருந்தான். அவன் கேசங்கள் புரவியின் வேகத்திற்கேற்ப இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தது. அவன் முக பாவனையில் இருந்து, அவன் ஏதோ ஒரு பரம ரகசியத்தை சுமந்திருப்பது போல் இருந்தது. நெடுகர்கள் பார்பதற்கு சற்று விசித்திரமாக இருப்பார்கள், நெடு நெடு வென்று சற்று வளர்ந்திருப்பார்கள். கீழ் திசை சந்திர தேசத்தில் அவர்களை அதிகம் பார்க்கலாம்.
ஆவாவிடம் இருந்து கீழ் திசை சந்திர தேசத்தை சேர்ந்த பல கண்டங்களை பாதுகாக்க நெடுகன்களின் சுறுசுறுப்பு மற்றும் புத்தி கூர்மையும் பேருதவியாக இருந்தது.
திடீரென்று பெரும் சத்தத்துடன் கண்களுக்குள் அடக்கமுடியாத மிக உயர்ந்த கோட்டை கதவுகள் திறந்தன. புரவியில் வேகமாக வந்து கொண்டிருந்த அந்த நெடுகன் பெரும் புயலான கோட்டைக்குள் உட்புகுந்தான்.
கோட்டை கதவுகள் பெரும் சத்தத்துடன் திறந்ததால் சாமானிய நெடுகர்கள் அங்கும் இங்குமாக சிதறி, குதிரையில் வந்த நெடுகனுக்கு வழிவிட்டனர்.
திடீரென்று அந்த பிரமாண்ட நகரம் பரபரப்பானது, உயர்ந்த மலையை ஒட்டி படு நேர்த்தியாக இயற்கை காவலரண்ங்களுடன் நெடுகர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த முன்னிரவு நேரத்தில் மலையுச்சியில் மிக பெரிய தீ மூட்டப்பட்டது. போர் வரப் போகும் சமிக்கை அது, கிளிநொச்சி, புகார் நகரங்களுக்கு மலையுச்சியில் மூட்டப்பட்ட தீ ஒரு சங்கோத மொழியாகும், வெகு விரைவில் அந்த தூரதேச நகரங்களில் இருந்து உயர் மட்டத்தில் இருக்கும் பிரியகிறர்களும், பரப்பியர்களும் இந்த நகரத்திற்கு வருவார்கள் என்பது உறுதி.
எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது, மேனாட்டு கிருமுகர்கள் கீழ்த்திசை சந்திர தேசத்தில் கால் பதிக்கும் வரை, தேவதேவிகள் நெடுகர்களுடன் இணைந்து இருந்த வரை கிறுமுகர்கள் தலை தூக்க முடியவில்லை.